பள்ளியில் ஆன்மிக விழா
கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.கடலுார் ஸ்ரீஜெயின் சங்கத்தின் சார்பில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த துறவிகள் இரண்டு பேர் பள்ளிக்கு வருகை தந்து ஆன்மிக சொற்பொழிவு நடத்தினர். தாளாளர் மாவீர்மல் சோரடியா வரவேற்றார்.அகிம்சையும், எந்த உயிரையும் கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் குறித்து மாணவர்களுக்கு போதித்தனர். மகாவீரரின் போதனைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.