உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாழாகும் மருந்து மாத்திரைகள் பெண்ணாடத்தில் அவலம்

பாழாகும் மருந்து மாத்திரைகள் பெண்ணாடத்தில் அவலம்

பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் பாழாவது பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 4 டாக்டர்கள், 4 செவிலியர்கள், 4 உதவியாளர்கள் பணியில் உள்ளனர். சுகாதார நிலையத்தில் தினசரி சுமார் 200 முதல் 300 பேர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 படுக்கைகள் கொண்ட கர்ப்பிணிகள் வார்டுகளும் உள்ளன.இங்கு, கர்ப்பிணிகளுக்கான 24 மணிநேர பிரசவம், லேப் வசதி, குடும்ப கட்டுப்பாடு, அனைத்து வகை தடுப்பூசிகள், பள்ளி சிறார் திட்டம், கோவிட் உள்ளிட்டவைகளுக்கு ஊசி, மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓமியோபதி சிகிச்சைக்கு தனியாக கட்டடம் உள்ளது. பாம்பு, தேள் போன்ற விஷக்கடிகளுக்கு சிகிச்சை, பல் மருத்துவம், பிசியோதெரபி மருத்துவமும் பார்க்கப்படுகிறது. எகஸ்ரே, ஸ்கேன் வசதிகள் உள்ளன.இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில் சுகாதார நிலையத்திற்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரை, நாப்கின் உள்ளிட்ட காலாவதி ஆகாதவை மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை வளாகத்தில் உள்ள கர்ப்பிணிகள் காத்திருக்கும் கூடத்தில் கொட்டி வைத்துள்ளனர். அவ்வாறு வைக்கப்பட்ட மருந்து பொருட்கள் சிதறி, பாழாகி வருவது பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை