உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

கடலுாரில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

கடலுார்: தமிழக முதல்வர் கோப்பைக்கான கடலுார் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள், நேற்று முன்தினம் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது. பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல்நாளில் கல்லுாரி மாணவர்களுக்கான இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, வாலிபால் மற்றும் ஹேண்ட்பால் உள்ளிட்டவை நடந்தன. அதில் வாலிபால், கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், மற்ற விளையாட்டுகள் அண்ணா விளையாட்டரங்கிலும் நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் மற்றும் பயிற்சியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை