மேலும் செய்திகள்
அரசு பள்ளிக்கு டி.வி., வழங்கல்
19-Jul-2025
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் இலங்கை தமிழர் முகாமில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காட்டுமன்னார்கோவில், ருத்திரசோலை பகுதி யில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் வசிக்கின்றனர். முகாமில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நேற்று நடந்தது. மறுவாழ்வு மண்டல பொறுப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வழங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட சேவையாளர் விஸ்வலிங்கம் முன்னிலை வகித்தார். முகாம் தலைவர் சுமன் வரவேற்றார். துணைத் தலைவர் மகேந்திரராஜா, செயலாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Jul-2025