மேலும் செய்திகள்
சரஸ்வதி வித்யாலயா மாணவிக்கு பாராட்டு
09-Jan-2025
சேத்தியாத்தோப்பு : சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.சிதம்பரம் புறவழிச்சாலையில் இயங்கி வரும் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரேணுகா கண்ணன் வரவேற்றார்.விழாவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் செந்தில்வேலன் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.விழாவில், கராத்தே, சிலம்பம், யோகா, வில்வித்தை, ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல், தடகள போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் விருதை, எட்டாம் வகுப்பு மாணவன் செந்தமிழ்செல்வன், பெண்களுக்கான சாம்பியன்ஷிப் விருதை ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹரினி பெற்றனர்.உடற்கல்வி ஆசிரியர் கீர்த்தனா நன்றி கூறினார்.
09-Jan-2025