உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் எஸ்.எஸ்.ஐ., காயம்

வி.சி., கட்சி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் எஸ்.எஸ்.ஐ., காயம்

கடலுார்:லோக்சபாவில் அம்பேத்கர் பற்றி பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, வி.சி., கட்சியினர் கடலுாரில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முன்னதாக, தலைமை தபால் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்தபோது, வி.சி., கட்சி தொண்டர் ஒருவர், தாம் பிரத்யேகமாக தயாரித்த ஒரு அடி உயரம் மற்றும் ஒரு அடி விட்டம் கொண்ட மெகா சைஸ் வெடியை வெடித்தார். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த கடலுார் முதுநகர் காவல் நிலைய சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்வேந்திரனுக்கு இடுப்பு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. அவரை, சக போலீசார் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரதான சாலையில் இவ்வளவு பெரிய வெடியை வெடிக்க போலீசார் எப்படி அனுமதி வழங்கினர் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !