உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகனம் மோதி எஸ்.எஸ்.ஐ., காயம்

வாகனம் மோதி எஸ்.எஸ்.ஐ., காயம்

வடலுார் : டாட்டா ஏஸ் மோதியதில் மொபட்டில் சென்ற எஸ்.எஸ்.ஐ., காயமடைந்தார். காட்டுமன்னார்கோயில், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்,54; இவர் தனது குடும்பத்துடன் வடலுார் ஜோதி நகரில் தங்கியுள்ளார். கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அவர் தனது மனைவி கொளஞ்சியுடன் வடலுார்-விருத்தாச்சலம் சாலையில் மொபட்டில் சென்றார். சிறிது துாரம் சென்ற போது, பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம், மொபட் மீது மோதியது. இதில், காயமடைந்த அவர்கள் கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !