உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பரங்கிப்பேட்டை,; பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி மற்றும் பெரியகுமட்டி ஊராட்சிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் பு.முட்லுாரில் நடந்தது. தாசில்தார் அன்பழகன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, பி.டி.ஓ., அமுதா முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சதீஷ்குமார் வரவேற்றார். பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முத்துப்பெருமாள் துவக்கி வைத்தார். 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். முகாமில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, ஒன்றிய அவை தலைவர் ராஜாராமன், மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் சக்தி வேல், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை