மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
20-Aug-2025
திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சி, தனியார் மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நகர்மன்ற துணை தலைவர் பரமகுரு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி மேலாளர் பார்த்திபன், பொறியாளர் ராமன் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் செமிளாதேவி சின்னு வரவேற்றார். முகாமில், 7 மற்றும் 8வது வார்டுகளைச் சேர்ந்த பொது மக்கள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன், இலவச மனைப்பட்டா, அரசின் இலவச வீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளித்தனர்.
20-Aug-2025