மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்
05-Sep-2025
நெய்வேலி : நெய்வேலி தொகுதி, கீழக்குப்பம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகளிர் உரிமைத்தொகை, விவசாய கடன், மருத்துவ காப்பீடு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் பி.டி.ஓ.,க்கள் மீரா, பாபு, பூங்குழலி, துணை தாசில்தார் சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், டாக்டர்கள் அறிவொளி, விஜயராகவன், தி.மு.க,. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், நிர்வாகிகள் அன்பழகன், ஜனார்த்தனன் உட்பட பலர் பங்கேற்ற னர்.
05-Sep-2025