மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
04-Oct-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சேத்தியாத்தோப்பு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.புவனகிரி தாசில்தார் அன்பழன், பேரூராட்சி துணை தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரி வரவேற்றார்முகாமில், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, வே ளாண்துறை, மின்சாரம், கூட்டுறவு சங்கம்,முதியோர் உதவித்தொகை, பதிவுத்துறை உள்ளிட்ட 13 துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். முகாமில், தி.மு.க., நகர செயலாளர் பழனிமனோகரன், தி.மு.க.. வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
04-Oct-2025