உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் முத்துப்பெருமாள், டாக்டர் மனோகர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சதீஷ்குமார் வரவேற்றார். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிமேகலை, மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, தலைமை ஆசிரியர் வேல்முருகன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாராமன், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட அமைப்பு சாரா அணி இணை செயலாளர் சுப்பு வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் அன்புராஜ், சரண்ராஜ், அன்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் எட்வின்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி