மேலும் செய்திகள்
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்
03-Oct-2025
சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு சேவை பொது மருத்துவ முகாம் நடந்தது. கீரப்பாளையம் வட்டார மருத்துவத்துறை சார்பில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கீரப்பாளையம் வட்டார மருத்துவர் அலுவலர் சிவப்பிரகாசம், வட் டார வளர்ச்சி அலுவலர்கள், பார்த்திபன், ஆனந்தன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், திருமூர்த்தி, பாலு, மாவட்ட துணைச் செயலாளர் சுதா சம்பத் முன்னிலை வகித்தனர். கடலுார் மாவட்ட மருத்துவத்துறை இயக்குநர் பொற்கொடி வரவேற்றார். அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து, மருந்து பெட்டகங்களையும், துாய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் நலம் காக்கும் அட்டையும் வழங்கினார். நகர செயலாளர் பழனி மனோகரன், பேரூராட்சி துணை தலைவர் கருணாநிதி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், ஒன்றிய அவை தலைவர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Oct-2025