உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில கால்பந்து போட்டி; நைசா அணி சாம்பியன்

மாநில கால்பந்து போட்டி; நைசா அணி சாம்பியன்

கடலுார்; நெய்வேலியில், மாநில அளவிலான கால்பந்து போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் கடலுார், விழுப்புரம், ஒசூர், திருப்பூர், மதுரை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும், கேரள மாநிலத்தை சேர்ந்த அணிகளும் பங்கேற்றன. 10, 12 மற்றும் 14வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. 12வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நைசா அணி 4வது இடத்தை பிடித்தது.மேலும், டிசம்பர் மாதத்தில் தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில், கடலுார் நைசா அணி முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனது. நெய்வேலி மற்றும் தஞ்சாவூரில் நடந்த போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் ஹரிஷ்தேவ், தியான்சன், விஷ்ணு, சூரியபிரகாஷ், ரேவந்த், ஸ்ரீராம், அபினேஷ், அறிவன், அறிவுச்செல்வன், தவசூர்யா, ஜேக்கப் ஆகியோர், கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர் பாலாஜி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை