மாநில கால்பந்து போட்டி கடலுார் அணி 3ம் இடம்
கடலுார்: மாநில அளவிலான கால்பந்து போட்டியில், மூன்றாமிடம் பிடித்த கடலுார் அணிக்கு பாராட்டுவிழா நடந்தது. சேலத்தில் கடந்த ஆக.9ம் தேதி மாநில அளவிலான 12வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடந்தது. இதில் கடலுார், சேலம், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. அதில் சேலம் அணி முதலிடத்தையும், தர்மபுரி அணி இரண்டாமிடத்தையும் பெற்றது. கடலுார் அணி மூன்றாமிடம் பிடித்து வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற வேவ்ஸ் அணி வீரர்களை கடலுார் குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன், தலைமைக்காவலர் ஞானமுருகன், அனிஷ் ஷர்மா ஆகியோர் பாராட்டினர். வி.காட்டுப்பாளையம் உடற்கல்வி ஆசிரியரும், பயிற்சியாளர் மகேஷ் குமார் உடனிருந்தார்.