உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் மாநில கபடி போட்டி

கடலுாரில் மாநில கபடி போட்டி

கடலுார்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடலுார் மாநகர தி.மு.க., சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடந்தது.கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை, கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். மேயர் சுந்தரி ராஜா, அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ராஜா வரவேற்றார்.தமிழக அணிக்காக கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற 5 வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டதுஇப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், 3ம் பரிசாக 2 அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரமும், காலிறுதியில் தோல்வியடையும் 4 அணிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், தமிழரசன், சுதா அரங்கநாதன், துர்கா செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை