உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில அளவிலான கபடி போட்டி பரிசளிப்பு விழா

மாநில அளவிலான கபடி போட்டி பரிசளிப்பு விழா

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூர் கிராமத்தில் கே.கே.பி., - கே.சி.சி., விளையாட்டு வீரர்கள், நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டிகள் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி தலைமை தாங்கினார். என்.எல்.சி., பவர் இயக்குனர் வெங்கடாசலம் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் 16ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். முதல் இடம் பிடித்த கே.கே.பி. காட்டுக்கூடலூர் அணிக்கு ரூ. 75,000 மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள சுழற்கோப்பையும், 2ம் பரிசு விருதுநகர் மாவட்டம், மீனாட்சிபுரம் அணிக்கு ரூ. 60,000 மற்றும் ரூ.15,000 மதிப்புள்ள சுழற்கோப்பையும், 3ம் பரிசு சேலம் மாவட்டம் செவன் லயன்ஸ் அணிக்கு ரூ. 45,000 மற்றும் ரூ. 10,000 மதிப்புள்ள சுழற்கோப்பையும் , 4ம்பரிசு புதுச்சேரி மங்கலம் அணிக்கு ரூ. 45,000 மற்றும் ரூ. 10,000 மதிப்புள்ள கோப்பை வழங்கினர்.விழாவில் என்.எல்.சி., செயல்இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ், மின்வாரிய நிதி இயக்குனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளையும், ரத்த கொடை யாளர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினர். விழாவில் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை