உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புள்ளியியல் துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

புள்ளியியல் துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

விருத்தாசலம் : விருத்தாசலம் கோட்ட புள்ளியியல் துறை பணியாளர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப துறையான பொருளியல் மற்றும் புள்ளியல் துறையில், 38 தொழில் நுட்ப பணியிடங்களை குறைத்து, அமைச்சுப் பணிகளாக மாற்றம் செய்வது அரசின் செயல் திட்டங்களுக்கு துல்லியமான புள்ளி விபரங்களை அவ்வப்போது களப்பணிகளை வழங்குவது, அதாவது கலைஞரின் மகளிர் உரிமை தொகை, முதல்வரின் காலை உணவு திட்டம், மக்களுடன் முதல்வர் முகாம், சிறு பாசன கணக்கெடுப்பு, விவசாய கணக்கெடுப்பு, பயிர் அறுவடை ஆய்வு, மாநில உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகளை உடனுக்குடன் மேற்கொண்டு புள்ளி விபரங்களை, புள்ளியியல் துறை வழங்கி வருகிறது. இந்த துறையில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பணியாளர்களை வைத்து, அரசுக்கு தேவையான புள்ளி விபரங்களை வழங்குகிறது. எனவே, கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். தொழில்நுட்ப பணிகளை அமைச்சு பணியிடங்களாக மாற்றுவதை தவிர்த்து, அரசாணை 118 நிலையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் கோட்ட பணியாளர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை