மேலும் செய்திகள்
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
26-Jul-2025
கடலுார் : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலின் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக கடலுார் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித் துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலுார் துறைமுகத்தில் துார புயல் சின்னத்தை குறிக்கும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
26-Jul-2025