சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை பஞ்சமூர்த்தி வீதியுலாவும்,இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடந்து வருகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில்,பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. கீழ வீதியில் புறப்பட்டு, தெற்கு வீதி, மேலவீதி வழியாக மீண்டும் கீழ வீதி கோவில் வாயிலை அதிகாலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 2ம் தேதி காலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு ராஜசபையில் மகாபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா முடிந்த பிறகு மதியம் 3:00 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனம், சித்சபா பிரவேசம் நடக்கிறது. வரும் 3ம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலாவும்,4 ம் தேதி தெப்பல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.