உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை வசதி வேண்டி நாற்று நடும் போராட்டம்

சாலை வசதி வேண்டி நாற்று நடும் போராட்டம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கிராம மக்கள் சாலை வசதி வேண்டி நாற்று நடும் போராட்டம் நடத்தினர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சக்கரமங்கலம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலரிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பெண்கள் சக்கரமங்கலம் கிராமத்தில் சேறும் சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நடும் போராட்டம் நடத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ