ஷூவில் பதுங்கிய பாம்பு கடித்ததில் மாணவர் அட்மிட்
ராமநத்தம்: ராமநத்தம் அருகே பள்ளி மாணவர், 'ஷூ' அணிந்த போது, அதில் பதுங்கியிருந்த பாம்பு, அவரை கடித்தது. கடலுார் மாவட்டம், தொழுதுார் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கவுசிக், 12; தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவர், நேற்று வழக்கம்போல காலை, 8:45 மணிக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து தயாரானார். பின், வீட்டின் வெளி வராண்டாவில் இருந்த தன் ஷூவை அணிந்தபோது, அதில் பதுங்கி இருந்த பாம்பு அவரை கடித்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், கவுசிக்கை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.