உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹோட்டலில் திருடிய மாணவன் கைது

ஹோட்டலில் திருடிய மாணவன் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ஓட்டலில் ரூ.14 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை கோட்டாத்தங்கரை தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் அலி, 25; பெரிய தெருவில் ஹோட்டல் வைத்துள்ளார். கடந்த 5ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடையை திறந்தபோது, கல்லா பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.14 ஆயிரம் திருடு போயிருந்தது.இதுகுறித்து, ரிஸ்வான் அலி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அதில், ஓட்டல் சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்து, அதில் கிடைத்த தகவலின்பேரில் ஓட்டலில் பணத்தை திருடிய, 6ம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவரை கைது செய்து, கடலுார் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை