உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர் காவல்படை துவக்க விழா

மாணவர் காவல்படை துவக்க விழா

நெல்லிக்குப்பம், : திருக்கண்டேஸ்வரம் பள்ளியில் மாணவர் காவல்படை துவக்க விழா நடந்தது.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 43 மாணவ மாணவிகள் மாணவர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான துவக்க விழா தலைமையாசிரியர் தேவனாதன் தலைமையில் நடந்தது.போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா கலந்து கொண்டு போதை பொருட் களால் ஏற்படும் தீமைகள், சாலை விதிகள், பேரிடர் மேலாண்மை, பெண்கள் பாதுகாப்பு, பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பற்றி விளக்கினார்.மேலும் அதுபற்றி வினாடி வினா நடத்தப் பட்டு பரிசுகளும் வழங்கினர். இந்த காவல்படை மாணவர்களுக்கு பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்படும். இப்பிரிவு மாணவர்கள் இது போன்ற நிகழ்ச்சி தகவல்களை தங்களுடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரியபடுத்துவார்கள்.விழாவில் ஒருங்கிணைப் பாளர்கள் ஷோபனா, அருணசிந்துஜா, ஆசிரியர்கள் பிரபாகரன், சுசித்ரா, மேரிவளர்மதி ஜோஸ்பின், பத்மாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை