மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
28-Dec-2024
கடலுார: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கடலுாரில் அரசு கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இதை கண்டித்து கடலுார் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லுாரி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து கல்லுாரி வளாகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து குண்டாசில் சிறையில் அடைத்து தண்டனை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
28-Dec-2024