உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 18 மணி நேரம் போராடி மாணவர் உடல் மீட்பு

18 மணி நேரம் போராடி மாணவர் உடல் மீட்பு

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த கோண்டூர் பெரிய தெருவை சேர்ந்த குரு மகன் கதிர்,17; கடலுார் அரசு ஐ.டி.ஐ., யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஐ.டி.ஐ.,க்கு சென்ற கதிர், தனது நண்பர்கள் 5 பேருடன் நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் குளித்தார். அப்போது, கதிர் தண்ணீரில் மூழ்கினார். தகவலின்பேரில், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பேரீடர் மீட்பு குழுவினர், அன்று மதியம் 1:00 மணியில் இருந்து நேற்று காலை 7:00 மணி வரையில், 18 மணி நேரம் போராடி கதிரின் உடலை சடலமாக மீட்டனர்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை