விருதுகளால் சாதிக்கும் வாழைக்கொல்லை ஊராட்சி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மாணவர்கள் எதிர்பார்ப்பு
சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தில் கடந்த 1953ம் ஆண்டு அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. இது கடந்த 1960ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1970ல் அரசு பள்ளியாக மாறியது. இப்பள்ளியானது பல்வேறு பெருமைகளை கொண்டது. குறிப்பாக, இங்கு பயின்ற மாணவர்கள் ஆசிரியர்கள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் என, பல பதவிகளை வகித்து வருகின்றனர். பள்ளியில் 131 மாணவர்கள் படிக்கின்றனர். அனைத்து வகுப்பறைகளும் குளிர்சாதன வசதியுடன் உள்ளது. மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் 60 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு பயிலும் மாணவர்கள் 4 பேர், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் கடலுார் மாவட்ட 'எலைட்' பள்ளிக்கு தேர்வாகி கல்வி கற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலுாரில் நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியில் நடந்த போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். இவர்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டினார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கருணாகரன், 2023--2024ம் கல்வியாண்டில் சென்னையில் நடந்த விழாவில், நல்லாசிரியர் விருது பெற்றார். இப்பள்ளி மாணவர்கள் கலைத் திருவிழா, கூட்டுறவு வார விழா போன்றவற்றில் கலந்து கொண்டு ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் பரிசுகளை குவித்துள்ளனர். தொண்டு நிறுவனம் மூலமாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி மற்றும் அறிவியல் ஆய்வகம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்மார்ட்போர்டு மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் இப்பள்ளி சிறந்த நடுநிலைப்பள்ளிக்கான விருதையும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் சிறந்த பள்ளிக்கான விருதையும் இப்பள்ளி பெற்றுள்ளன. மாணவர் சேர்க்கை அதிகரிப்புதனியார் பள்ளிகளுக்கு நிகராக இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல் பணிகளை பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப் பினர்களுடன் இணைந்து சிறப்பாக செய்து வருகிறோம். கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசின் நலத்தி ட்ட உதவிகளை உடனுக்குடன் பெற்று தருகிறோம். போட்டித் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்து வருகிறோம். மாணவர்களுக்கு கற்றல் மட்டுமின்றி, நல்லொழுக்கம், கட்டுப்பாடுகளை கற்பிக்கிறோம். பள்ளியை தரம் உயர்த்தினால், சுற்றியுள்ள கிராம மாணவர்களின் கல்வித்திறன் உயரும். கருணாகரன்,தலைமை ஆசிரியர் (பொறுப்பு)மாணவர்கள் நலனில் அக்கறைஇப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கென்று 'வாட்ஸ் ஆப்' பில் தனி குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கூட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக சிலம்பம், கராத்தே பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.மாணவர்கள் நலனில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அக்கறை செலுத்துகின்றனர். மாணவர்கள் உதவி மையம் எண், குழந்தைகள் உதவி மையம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். பள்ளி மேலாண்மை குழு மூலமாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. வெண்ணிலா,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்.தரம் உயர்த்த வேண்டும்கடந்த 1953ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளிக்கு நீண்ட வரலாறு கொண்டது. பள்ளியை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் இங்கு, கல்வி பயின்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்ற னர். பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி புதிய வகுப்பறைகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னீர்செல்வம்,முன்னாள் ஊராட்சி தலைவர்.இங்கு படித்தது மகிழ்ச்சிபொதுப்பணித்துறையில் இன்ஜினியராக பணிபுரிகிறேன். எனக்கு அடிப்படை தமிழை கற்றுத் தந்ததே இப்பள்ளிதான். நாங்கள் படித்த காலத்தை விட தற்போது பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், கற்றல் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம். தமிழ் வழியில் பயின்றே இன்ஜினியராக உள்ளேன். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழி மோகத்தை தவிர்த்து தமிழ் வழியில் பயில்வதால் கிடைக்கும் அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உமா,உதவி இன்ஜினியர், நீர்வளத்துறை, விருத்தாசலம்.அடிப்படை காரணம்எனது மகள் தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இப்பள்ளியின் செயல்பாடுகளை பார்த்து எனது மகளை இப்பள்ளியில் சேர்த்தேன். 8ம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகை பெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின், புவனகிரி பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தேன். திறனாய்வு தேர்வில் மாநில அளவில் 7ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தார். இதற்கெல்லாம் இப்பள்ளியில் தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகை தேர்வு எழுதியதே அடிப்படை காரணம் ஆகும். அறிவழகன்,உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு.முதல் மாணவராக தேர்வு2013-2014ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு படித்தேன். அப்போது மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகை தேர்வில் இப்பள்ளியில் முதல் மாணவராக தேர்வானது மகிழ்ச்சி ஆகும். அப்போது ஓ.எம்.ஆர்., தாளில் எவ்வாறு விடையளிப்பது என்பதை கற்றுக் கொண்டேன். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று சென்னை பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளராக கடந்த ஆண்டு பணியில் சேர்ந்தேன். இதற்கு இப்பள்ளியில் அளிக்கப்பட்ட அடிப்படை பயிற்சியே காரணம் பிரனேஷ்,இளநிலை உதவியாளர், பொதுப்பணித்துறை, சென்னை.