உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலம்பத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

சிலம்பத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க தலைமையாசிரியர் தேவனாதன் முயற்சி செய்து வருகிறார். இப்பள்ளி மாணவர்கள் சிலம்பம் உட்பட பல விளையாட்டுகளில் பல வெற்றிகளை பெற்றுள்ளனர். சங்கராபுரத்தில் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் அபிராமி, சச்சின், ஆறாம் வகுப்பு படிக்கும் தேசிகா, தரணிதரன் ஆகியோர் தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி ஆஸ்கார் உலக சாதனையாளர் விருதினை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தலைமையாசிரியர் தேவனாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ