உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி கர்ப்பம்: மாணவன் கைது 

மாணவி கர்ப்பம்: மாணவன் கைது 

சிதம்பரம், : சிதம்பரம் பகுதி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும், புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், சிதம்பரத்தில் வெவ்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வந்தனர். பஸ்சில் வரும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண ஆசை காட்டி, மாணவியை, மாணவர் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை, பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து, மாணவியின் தாய் கொடுத்த புகாரின் போரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, மாணவரை கைது செய்து, கடலூர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ