மேலும் செய்திகள்
அடிமுறை, சிலம்பு கலை கற்பிக்கும் தஞ்சை தமிழர்
27-Dec-2024
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரை சேர்ந்தவர் சிவராஜ். ஹாக்கி பயிற்சியாளர். மத்திய அரசு மூலம் அரியானாவில் நடத்தப்படும் ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளி மைதானத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஹாக்கி பயிற்சி கொடுக்க முடிவு செய்தார்.ஹாக்கி பயிற்சியை கடந்த 6 ஆண்டாக இலவசமாக வழங்கி வருகிறார். இவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதால் அதிகாலை 5:30 மணியில் இருந்து 8:00 வரை பயிற்சி அளிக்கிறார்.இவரிடம் பயிற்சி பெற்ற பல மாணவிகள் தமிழக அணியில் இடம் பிடித்து இந்திய அளவிலான போட்டிகளில் விளையாடுகின்றனர். தற்போது புதியதாக மாணவர்களை சேர்க்க தேர்வு முகாம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் 70 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நகரத்தில் பயிற்சிக்கு போதுமான இட வசதி இல்லாத நிலையில், அரசு இடம் ஒதுக்கி கொடுத்தால் வசதியாக இருக்கம் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
27-Dec-2024