மாநில போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
சிதம்பரம்; நெய்வேலியில் நடைபெற்ற, வருவாய் மாவட்டம் அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் சிதம்பரம், ராமசாமி செட்டியார் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று, வெற்றி பெற்று, மாநில அளவில், ஈரோடில் நடைபெறும் தடகள போட்டிக்கு தகுதிப் பெற்றனர். அதில், 14 வயதிற்குட்பட்ட, 200 மீட்டர் ஓட்டத்தில், பெண்கள் பிரிவில் கிருத்திகா இரண்டாமிடமும், 400 மீட்டர் ஓட்டத்தில கிருத்திகா, பொற்கோடி, தனுஸ்ரீ, பிரதிக்ஷா ஆகியோர் 2ம் இடம் பிடித்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில், தனுஸ்ரீ, 3ம் இடத்தில் வந்தார்.14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், 100 மீட்டர் ஓட்டத்தில் கம்பன் முதலிடம், 200 மீட்டரில் 2 ம் இடம், 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ராகுல் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். தொடர் ஓட்டத்தில் முகமது அன்வருல் அன்சாரி, முகமது அஜ்மத் அன்சாரி, ராகுல், சந்திரமோகன் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை தலைமை ஆசிரியர் ஜெயராமன் பாராட்டினார். உடற்கல்வி இயக்குநர் பிரின்ஸி செபாஸ்டியன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருவரசமூர்த்தி, சந்தோஷ்குமார் உடன் இருந்தனர்.