உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட இடமின்றியும் சாதித்த மாணவிகள்

விளையாட இடமின்றியும் சாதித்த மாணவிகள்

பரங்கிப்பேட்டை ; பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால், பள்ளியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு மாலை நேரங்களில் சென்று விளையாடி வருகின்றனர்.தற்போது, மாவட்ட அளவில் கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் இப்பள்ளி மாணவிகள் 10 பேர் மாவட்ட அளவில் வெற்றிப்பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.எனவே, மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த, பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமாக விளையாட்டு மைதானம் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !