உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மாணவர்கள் விடுதியில் ஆய்வு

அரசு மாணவர்கள் விடுதியில் ஆய்வு

சிறுபாக்கம், : சிறுபாக்கம் மற்றும் அடரி அரசு மாணவர்கள் விடுதகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார்.சிறுபாக்கம் மற்றும் அடரி கிராமங்களில் அரசு மாணவர்கள் விடுதிகள் உள்ளது. இங்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு செய்தனர். அதில், விடுதியை துாய்மையாக பராமரிப்பது, உணவு பொருட்களின் தரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, வருவாய் அலுவலர் சங்கர், விடுதி காப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ