உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டார்மங்கலம் ஊராட்சியில் ஆய்வு

நாட்டார்மங்கலம் ஊராட்சியில் ஆய்வு

சிதம்பரம்; முன்மாதிரி ஊராட்சியாக பரிந்துரை செய்த நாட்டார்மங்கலம் ஊராட்சியை, ஹைதராபாத் தேசிய ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன ஆலோசகர் சரண்ராஜ் ஆய்வு மேற்கொண்டனர். கடலுார் மாவட்டத்தில் தேசிய அளவிலான விருது வழங்கிட 2 ஊராட்சிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டார்மங்கலம் ஊராட்சியில் ஹைதராபாத் தேசிய ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன ஆலோசகர் சரண்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். அதில், கிராம வளர்ச்சி, கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்டம், கிராம ஊராட்சியின் தொகுப்பு, தூய்மை பாரத இயக்கக பணிகள் மற்றும் ஊராட்சி தொடர்புடைய பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சி தலைவர் சுதா மணிரத்தினம் வரவேற்றார். மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், பி.டி.ஓ., மீனாட்சிசுந்தரம், மண்டல துணை பி.டி.ஓ., சுகுமார், துணைத் தலைவர் கார்த்திகேயன், ஊராட்சி செயலர் பாலமுருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், மகளிர் குழு பொறுப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை