மேலும் செய்திகள்
டிரான்ஸ்பார்மர் அருகே தீ பிடித்ததால் பரபரப்பு
09-Jun-2025
கடலுார் : கடலுார் அடுத்த வசந்தராயன்பாளையம் மாநகராட்சி குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. நேற்று இரவு 7:30 மணிக்கு குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.இதனால் குப்பைகள் பற்றி எரிந்தது. அருகில் உள்ள பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்த கடலுார் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
09-Jun-2025