திடீர் மின்வெட்டு அதிகரிப்பு வியாபாரிகள், மக்கள் அவதி
விருத்தாசலம்: தீபாவளி நெருங்கிய நிலையில், விருத்தாசலத்தில் ஜவுளி, மளிகை, பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அன்றாட தேவைக்கு மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பெரியார் நகர், பஸ் நிலையம் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் வியாபாரிகள், பொது மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். காலையில் பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் பெண்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். அதுபோல் லேசான இடி, மின்னலுக்கு திடீரென மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் பண்டிகை நேரத்தில் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, விருத்தாசலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை தவிர்த்திட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.