உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சாலையில் திடீர் பள்ளம்

கடலுார் சாலையில் திடீர் பள்ளம்

கடலுார், ; கடலுார் அரசு தலைமை மருத்துவமனை எதிரே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.கடலுார் அரசு தலைமை மருத்துவமனை எதிரே, சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோலுக்கு அருகே நேற்று மாலை 6:00 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பேரிகார்டு அமைத்து, போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்தனர்.ஏற்கனவே அதே பகுதியில் பள்ளம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை