மேலும் செய்திகள்
நடுரோட்டில் பழுதான அரசு பஸ்: பயணிகள் தவிப்பு
04-Jul-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே அரசு விரைவு பஸ்சில் திடீரென பழுது ஏற்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று காலை டி.என்.32 என். 4212 பதிவெண் கொண்ட அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் அருகில் வந்த போது, பஸ் திடீரென பழுதாகி நின்றது. இதனால், 30க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பஸ்சில் வந்த முதியவர்கள், பெண்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். வெகு நேரம் காத்திருந்து கும்பகோணம் செல்லும் மாற்று பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
04-Jul-2025