உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கணவர் கைது கள்ளக் காதலை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம்

பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கணவர் கைது கள்ளக் காதலை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மனைவி கொலை வழக்கில் கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, ஜெயின் பாபா தெருவை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில்,50; பு.முட்லுார் தனியார் ஓட்டல் மேலாளர். இவரது மனைவி பர்க்கத்துன்னிசா, 48; பரங்கிப்பேட்டையில் தேங்காய் கடை வைத்துள்ளார். இவர், கடந்த 6ம் தேதி இரவு பு.முட்லுார் ஓட்டலில் கணவரை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது, முகத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். டி.எஸ்.பி., லாமேக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பர்கத்துன்னிசா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தங்கை பர்வீன் அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் பிரிவின் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கு தொடர்பாக ேஷக் இஸ்மாயிலை போலீசார் நேற்று சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஷேக் இஸ்மாயில் வேலை செய்யும் ஓட்டலில் தீர்த்தாம்பாளையத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி வீரம்மாள்,39; வேலை செய்தார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது. இதையறிந்த, பர்க்கத்துன்னிசா, இருவரையும் கண்டித்தார். இது தொடர்பாக கடந்த 6ம் தேதி இரவு பர்க்கத்துன்னிசா ஓட்டலில் ேஷக் இஸ்மாயிலும் கண்டித்த போது, தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ேஷக் இஸ்மாயில், வீரம்மாள் சேர்ந்து பர்க்கத்துன்னிசாவை கொலை செய்ய முடிவு செய்தனர்.இத்தகவலை வீரம்மாள் தனது மகன் அகில்ராஜிடம்,20; கூறினார். அகில்ராஜ் தனது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு மகன் அஜய், 20; என்பவருடன் சேர்ந்து பர்க்கத்துன்னிசா வீடு திரும்பிய போது, வழிமறித்து துப்பட்டாவால் கழுத்தை நெறித்து, முகத்தில் தாக்கி கொலை செய்து தெரிந்தது. அதையடுத்து, போலீசார் சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்கமாக மாற்றி ேஷக் இஸ்மாயில், வீரம்மாள், அகில்ராஜ், அஜய், 20; ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை