மேலும் செய்திகள்
பழநி அருகே தேங்காய் நார் லாரியில் பற்றிய தீ
29-Oct-2025
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 58; இவர் அதே பகுதியில் நான்கரை ஏக்கரில் கரும்பு பயிர் செய்திருந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் கரும்பு வயல் வழியே சென்ற மின்கம்பி காற்றில் ஒன்றோடொன்று உரசியதால் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
29-Oct-2025