உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு கொள்முதல் வழிமுறைகள் கடலூர் கலெக்டர் தகவல்

கரும்பு கொள்முதல் வழிமுறைகள் கடலூர் கலெக்டர் தகவல்

குள்ளஞ்சாவடி : அரசு சார்பில் பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யும் நடைமுறைகளை கடலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு, அட்டைதாரர்களுக்கு பன்னீர் கரும்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டு பகுதியில், கரும்பு வயல்களை கடலூர் கலெக்டர், சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பன்னீர் கரும்பின் தரம், சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்தார்.அப்போது அவர் கூறியதாவது:விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பன்னீர் கரும்புகளை, வேளாண் மற்றும், கூட்டுறவு துறை அலுவலர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.கடலூர் மாவட்டத்தில், 7.78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு கொள்முதல் செய்ய வட்டார அளவிலான 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு அலுவலர்கள் அரசு அறிவுரைப்படி, 6 அடிக்கு உயரம் குறையாத, மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனை விட கூடுதலாக இருக்கும் பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்வர்.நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படாது. விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் தொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெற்று, உரிய தொகை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே இடைத்தரர்களை நம்ப வேண்டாம்.கடலூர் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால், இதர மாவட்ட அலுவலர்களும் இங்கு கரும்பு கொள்முதல் செய்யலாம். ஒரே கிராமத்தில், ஒரே விவசாயிடமிருந்து ஒட்டுமொத்த கொள்முதலும் செய்யாமல் அனைத்து கிராமங்களிலும், பரவலாக கரும்பின் தர அடிப்படையில் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !