கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி துவக்கம்
கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் துவங்கியது.மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்க பயிற்சியாளர் ராகுல், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து 14, 16, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி துவங்கியது. இதில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். முகாம் மே 11ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சியாளர்கள் பாபு, மகேஷ், மகேந்திரன், மதி, பான்சிங், ரமேஷ் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.