மேலும் செய்திகள்
மகன்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
08-May-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நடுவீரப்பட்டு ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குளம் மற்றும் சுற்றுப் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்தவும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதை நிறுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கடலுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசி, தொழில்நுட்ப உதவியாளர் உமாதேவி, பணி மேர்பார்வையாளர் ஜோதி, ஊராட்சி செயலர் ரவிராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
08-May-2025