உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு

குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குளத்தில் கிடந்த சுவாமி சிலையை, கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள நல்வாழி பிள்ளையார் குளத்தில் நேற்று 2 அடிஉயரமுள்ள கருங்கல் சுவாமி சிலை கிடந்தது. அதனை அறிந்த கிராம மக்கள், சுவாமி சிலையை எடுத்து சென்று, பரங்கிப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். சிலையின் உருவம் சரியாக தெரியாததால் எந்த சுவாமி என தெரியவில்லை.இதுகுறித்து போலீசார், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை