உள்ளூர் செய்திகள்

ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பூஜையை முன்னிட்டு அன்று மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை