ஊஞ்சல் உற்சவம்
நடுவீரப்பட்டு: மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் எனும் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து, கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக்குழு தலைவர் வைத்திலிங்கம் மற்றும் குழுவினர்கள்,உபயதாரர்கள் செய்திருந்தனர்.