உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாசில்தார் அலுவலகம் நெய்வேலியில் திறப்பு

தாசில்தார் அலுவலகம் நெய்வேலியில் திறப்பு

நெய்வேலி : நெய்வேலியில் புதிதாக துவங்கப்பட்ட தனி தாசில்தார் அலுவலகத்தை எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.நெய்வேலி தொகுதி இந்திரா நகர் மற்றும் பெருமாத்தூர் ஊராட்சியில் மாற்று குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 4,000 மேற்பட்ட குடும்பங்களுக்கு என்.எல்.சி., சார்பில் வழங்கிய வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கிட, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.இதுதொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதனையொட்டி, இந்திரா நகர் ஊராட்சியில் தனி தாசில்தார் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர்கள் ராஜலட்சுமி , காமாட்சி முன்னிலை வகித்தனர். தொகுதி பார்வையாளர் இளையராஜா, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்தஜோதி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், தாசில்தார்கள் அசோகன், பாலசுப்ரமணியன், வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, இந்திரா நகர் வார்டு உறுப்பினர்கள் இளையராஜா, செல்வநாயகம், உமா மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 25 ஆண்டு கால் பிரச்னையை தீர்த்து வைத்த எம்.எல்.ஏ.,விற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை