உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தனித்திறன் போட்டி

 தனித்திறன் போட்டி

சிதம்பரம்: பள்ளியில் விழிப்பணர்வு நிகழ்ச்சி மற்றும் தனித்தறன் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிதம்பரம், வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சிறுசேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்கள் தனித்திறன் வெளிப்படுத்தும் போட்டி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், தேசத் தலைவர்கள், சமூகத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், ஊட்டச்சத்து மிக்க காய் கனிகள் போன்ற பல்வேறு வேடமணிந்து தனித்திறனை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு, பள்ளி சேர்மன் குமார் தலைமை தாங் கி, சிறுசேமிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இயக்குனர் முரளி குமார், முதல்வர் ராதிகா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசு வழங்கினர். வீனஸ் நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் ஜீலியா, மே லாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை