மேலும் செய்திகள்
3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை
03-Jul-2025
கடலுார் : கடலுார் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி வெங்கடேஸ்வரி,49; முன்னாள் ஊராட்சி தலைவர். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். நேற்று மதியம் அவர் கடையில் இருந்த போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், பேப்பர் பிளேட் கேட்டனர். அதை எடுத்து கொடுத்த போது, வெங்கடேஸ்வரி அணிந்திருந்த இரண்டரை சவரன் தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
03-Jul-2025