உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொ.மு.ச., கொள்முதல் பிரிவு கூட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொ.மு.ச., கொள்முதல் பிரிவு கூட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சுப்புசரவணன் தலைமை தாங்கினார். தொ.மு.ச., நெல்கொள்முதல் பிரிவு நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். அப்துல்ரஹமான் வரவேற்றார்.மாவட்ட தலைவர் ராமநாதன், மாவட்ட செயலாளர் ராஜகோபால், மாநில அமைப்பு செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.2014 -2016 ஆண்டு வரை பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதலில் பணிபுரியும் பணியாளர்கள் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டு கொள்முதல் நிலையங்களில் பணியமர்த்த வேண்டும்.கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மணிகோதண்டராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை